Wednesday, 18 April 2012

Hundred Moons

நூறு நிலா வந்தாலும்
நீ வரும் வழிகளில்
ரசப் பூச்சால் அலர மெழுகி
வெள்ளி வெளிச்சத்தால் கோலமிட்டு
நட்சத்திரக் குத்து விளக்குகளை
அடிக்கு அடிக்கு நிறுத்தி வைத்து
என் வீட்டிற்கு கைகாட்டியாக
முடியவில்லை என்றால்
அது என்ன ஒரு நிலா?
அது போல் நூறு நிலா
வந்தாலும் நான் மதிக்க மாட்டேன்.
வையவன்

Gun and Men

ஒரு துப்பாக்கியை வடிவமைக்கும்போது
குண்டு உட்காரக் குழியில்
அதற்கு சௌகர்யமான வடிவ வசதி
செய்து தந்து விடுகிறீர்கள்
புல்லட்டை வார்த்தெடுக்கும்போது
அதன் கூர்நுனி
திசுக்களின் சாம்ராஜ்யத்தில்
சரேலென்று ஊடுருவி உறுதியாக இறங்க
சிரத்தை காட்டுகிறீர்கள்
மனித உயிரை வளர்ப்பதாக
ப்
சொல்லி
ப் பணியாற்றும்போது தான்
பல விஷயங்களை ஏனோ
மறந்து போகிறீர்கள் இயல்பாகவே!

வையவன்
என் நெஞ்சிலே ஒத்தடம்
மைசூரில் மானச கங்கோத்ரியில்
மரமே உதிர்ந்து விட்டது போல்
சாலையெல்லாம் கொட்டிக் கிடந்த
கொன்றை மலர் விரித்திருந்த
மஞ்சள் பாவாடை மீது
கால் செருப்புக்குக் கூட
நோவாதவாறு உன்
சிவந்த பாதம் நடந்து
வந்த மிருது மென்மை என் நெஞ்சிலே
மெத்து மெத்தென்று ஒத்தடம் தந்து
கந்தர்வனாக்கியது கணப்பொழுது
 வையவன்

Tuesday, 17 April 2012

vaanaveli


ஆறுதல் தருகிறது வானவெளி
அல்லாஹூவின்  கஜானாவில்
எத்தனை உதயங்கள் காத்திருக்கின்றன அடுத்தடுத்து ?
எண்ண முயன்ற எத்தனை பேர் அஸ்தமித்து விட்டார்கள்?
கர்த்தரின் கருவூலத்தில்
எத்தனை காலை மாலைகள் குவிந்திருக்கின்றன?
கணக்கிட முற்பட்டவர் யாராவது மிஞ்சியது உண்டா உயிரோடு?
கண்ண பரமாத்மாவின் கண்ணின் சிறு சிமிட்டலில்
உதித்து மறைந்த யுகங்களின் கணக்குப்பிள்ளை எங்கே ?
நேற்றுப் பெய்த மழையில்  பரம்பொருளின்
கருணையால் உதித்த காளான்கள் போல மனிதர்கள்
பிறக்கிறார்கள் பிடுங்கி எறியப்படுகிறார்கள் மறுநாள்
யுகக்கணக்கு போட்டுச் சேவலாகக் கொக்கரித்துக்
கோழியாகிக்  குருமாவாய் பிரியாணியாய்ப்
பொசுங்கி இரண்டு உலுக்கு பூமி உலுக்கியதுமே
அழியப் போகிறது உலகம் என்று அஞ்சிச் சாகிறார்கள்
ஐயோ பாவமென்று ஆறுதல் தருகிறது வானவெளி .
வையவன்